டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்: ஆட்சி அமைக்க வியூகம்?

இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.;

Update:2024-06-05 01:42 IST

புதுடெல்லி,

தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதற்காக கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. புதிய ஆட்சி அமைக்கவும், வியூகம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்