'இந்தியா' கூட்டணியிடம் கொள்கையும் இல்லை, தலைவரும் இல்லை - பியூஷ் கோயல் விமர்சனம்

‘இந்தியா’ கூட்டணியிடம் கொள்கையும் இல்லை, தலைவரும் இல்லை என பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார்.;

Update:2024-05-23 19:47 IST

புதுடெல்லி,

மேற்கு டெல்லி மக்களவை தொகுதி வேட்பாளர் கமல்ஜீத் ஷெராவத்தை ஆதரித்து மத்திய மந்திரி பியூஷ் கோயல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-

"எங்களுக்கு போட்டியே இல்லை, ஏனெனில் 'இந்தியா' கூட்டணியிடம் கொள்கையும் இல்லை, செயல்திட்டமும் இல்லை. அவர்களிடம் தலைவரும் இல்லை. 'இந்தியா' கூட்டணி தோல்வியடைந்துவிட்டது. மக்களுக்கு வாக்குறுதி கொடுக்கும் வகையில் எந்தவொரு உறுதியான திட்டமும் அவர்களிடம் கிடையாது. தற்போது இருக்கும் நிலவரத்தை வைத்து பார்க்கும்போது மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றும்."

இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்