நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான புகார் எண்களை வெளியிட்ட வருமானவரித்துறை

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையால் பிரத்யேகமாக செயல்படும் 24X7 கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-03-17 10:24 GMT

சென்னை,

நாடாளுமன்றத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19 முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன.

இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக வருமான வரித்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையால் பிரத்யேகமாக செயல்படும் 24X7 கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு தனி நபரோ அல்லது கட்சியோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ பணம் அல்லது இலவச பொருட்களை விநியோகிப்பது பற்றிய புகார்களை / தகவல்களை தெரிவிக்க விரும்பினால் வருமான வரி அலுவலகத்தில் உள்ள கீழ்க்கண்ட கட்டணம் இல்லா தொலைபேசி எண் / மின்னஞ்சல்/ புலனம் (whatsapp) மூலம் தொடர்பு கொள்ளலாம்.

தகவலை பகிர்ந்துகொள்பவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

கட்டணம் இல்லா தொலைபேசி எண் – 1800 425 6669,

மின்னஞ்சல் : tn.electioncomplaints2024@incometax.gov.in

வாட்ஸ்ஆப் – 94453 94453 . 

Tags:    

மேலும் செய்திகள்