'முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க விரும்பினால்...' - லாலு பிரசாத் யாதவ் மீது அசாம் முதல்-மந்திரி கடும் தாக்கு

காங்கிரசும், ராஷ்டிரீய ஜனதாதளமும் அரசியல் சாசனத்தை அவமதிப்பதாக அசாம் முதல்-மந்திரி குற்றம் சாட்டினார்.;

Update:2024-05-19 04:57 IST

சிவன்,

அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று பீகாரின் சிவன் மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவை கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறுகையில், 'இந்தியாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு இல்லாதபோதும், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறியிருக்கிறார். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் லாலு பிரசாத் யாதவுக்கு அவ்வளவு ஆர்வம் என்றால், அவர் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும். ஏனெனில இந்தியாவில் அது சாத்தியமில்லை' என தெரிவித்தார்.

கர்நாடகாவில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கியிருப்பதாக குற்றம் சாட்டிய ஹிமந்தா, ஆந்திராவிலும் அந்த கட்சி ஆட்சியில் இருந்தபோது இதை அமல்படுத்தியிருந்ததாக கூறினார்.

இந்திய அரசியல் சட்டத்தில் தலித், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளதாகவும், காங்கிரசும், ராஷ்டிரீய ஜனதாதளமும் அரசியல் சாசனத்தை அவமதிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்