தென்காசி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் - தி.மு.க. வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார்
தென்காசி மக்களவைத் தொகுதியில் என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று தி.மு.க. வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.;
தென்காசி,
தென்காசி மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் கூறியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை போன்ற தி.மு.க அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பேன். தென்காசி மக்களின் ஆதரவுடன் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தென்காசி மக்களவைத் தொகுதியில் என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
தென்காசி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன். தென்காசி மக்களவைத் தொகுதியில் தி.மு.க.,வின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. செண்பகவல்லி அணைக்கட்டு பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன் என்றார்.