'பா.ஜ.க.வின் வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்வேன்' - எல்.முருகன்

அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்குகளை பா.ஜ.க. உருவாக்கியுள்ளதாக எல்.முருகன் தெரிவித்தார்.;

Update:2024-03-24 21:44 IST

நீலகிரி,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "இந்த தேர்தலில் பிரதமர் மோடிதான் ஹீரோ. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு வளர்ச்சியடைந்த தேசத்தை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். எங்கள் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளன.

இந்த தேசத்தை வளர்ச்சியடையச் செய்வதற்காக அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்குகளை பா.ஜ.க. உருவாக்கியுள்ளது. எங்கள் வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து மக்களிடம் பிரச்சாரம் செய்வேன்."

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.


Full View

Tags:    

மேலும் செய்திகள்