டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகர் போட்டியிடுகிறார்.;
விருதுநகர்,
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜயபிரபாகருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்கு சேகரித்தார்.
அப்போது விருதுநகர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டீ கடையில், ராஜேந்திர பாலாஜி தானே டீ போட்டு வேட்பாளர் விஜயபிரபாகர் மற்றும் கட்சியினருக்கு கொடுத்தார். அதை அவர்கள் ரசித்து குடித்தனர். இதையடுத்து அவர் மற்ற பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.