கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி மாண்டியாவில் போட்டி

குமாரசாமியின் மகன் நிகில், மாண்டியா தொகுியில் போட்டியிடுவார் என்றும் பேசப்பட்டது.;

Update:2024-03-26 21:54 IST

பெங்களூரு,

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 26-ந் தேதி மற்றும் மே மாதம் 7-ந் தேதி என 2 கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

இந்த நிலையில், கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி மாண்டியா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டியா தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

குமாரசாமியின் மகன் நிகில், மாண்டியா தொகுியில் போட்டியிடுவார் என்றும் பேசப்பட்டது. ஆனால், தற்போது குமாரசாமியே மாண்டியா தொகுதியில் களமிறங்க முடிவு செய்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்