முதற்கட்ட வாக்குப்பதிவு: நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நல்ல வரவேற்பு - பிரதமர் மோடி
முதற்கட்ட ஓட்டுப்பதிவில் ஓட்டளித்த வாக்காளர்களுக்கு பிரதர் மோடி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மக்களவை தேர்தலில் முற்கட்ட ஒட்டுப்பதிவு இன்று நிறைவு பெற்றது. இத்தேர்தலில் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
இது தொடர்பாக தனது ‛எக்ஸ்' தளத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:-
இன்று வாக்களித்த முதல்முறை வாக்காளர்கள் இந்தியா முழுதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கின்றனர் என்பது தெளிவாகிறது. முதற்கட்ட தேர்தலில் ஒட்டளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.