மணிப்பூரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு; ஆயுதங்களுடன் வாக்குச்சாவடிக்குள் புகுந்த கும்பல், துப்பாக்கிச்சூடு

மணிப்பூரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.

Update: 2024-04-19 12:00 GMT

இம்பால்,

மணிப்பூரில் மொத்தமுள்ள 2 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் உள் மணிப்பூர் தொகுதியில் இன்று தேர்தல் நடைபெற்றது. வெளிமணிப்பூரில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் மீதமுள்ள 13 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 2வது கட்ட தேர்தல் வரும் 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 4 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவின்போது ஒருசில இடங்களில் வன்முறையும், துப்பாக்கிச்சூடு சம்பவமும் அரங்கேறியுள்ளது.

அம்மாநிலத்தின் கிழக்கு இம்பாலில் உள்ள மொய்ரங் பகுதியில் வாக்குச்சாவடி அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்தார். அதேபோல், தங்ஜு பகுதியில் வாக்குச்சாவடிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் காங்கிரஸ் பூத் ஏஜெண்ட்டை வெளியேற்றிவிட்டு கள்ளஓட்டு பதிவு செய்துள்ளனர். பின்னர், வாக்கு எந்திரத்தையும் உடைத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டனர். தற்போது 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மணிப்பூரில் 3 மணி நிலவரப்படி 63.03 சதவிகிதம் வாக்கு பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது  

Tags:    

மேலும் செய்திகள்