தமிழ்நாட்டில் களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? - வெளியான அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-03-23 17:41 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய 27ம் தேதி கடைசி நாள். வேட்புமனுக்கள் மீது 28ம் தேதி பரீசிலனை செய்யப்படும். வேட்புமனுவை திரும்பபெற 30ம் தேதி கடைசி நாள் ஆகும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 10 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகள், ம.தி.மு.க. 1 தொகுதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 தொகுதி, கொங்கு மக்கள் தேசிய கட்சி 1 தொகுதியிலும் போட்டியிட உள்ளன. எஞ்சிய 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளது.

இதில், தி.மு.க. உள்பட அனைத்து கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. ஆனால், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது.

அதன் விவரம்:-

திருவள்ளூர் (தனி) - சசிகாந்த் செந்தில்

கிருஷ்ணகிரி - கோபிநாத்

கரூர் - ஜோதிமணி

கடலூர் - விஷ்ணு பிரசாத்

சிவகங்கை - கார்த்தி சிதம்பரம்

விருதுநகர் - மாணிக்கம் தாகூர்

கன்னியாகுமரி - விஜய் வசந்த்

எஞ்சிய 3 தொகுதிகள்:-

திருநெல்வேலி

மயிலாடுதுறை

புதுச்சேரி

Tags:    

மேலும் செய்திகள்