'மாநில சுயாட்சியை பாதுகாக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது' - கனிமொழி எம்.பி.

விவசாயிகள், சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.;

Update: 2024-03-20 16:14 GMT

சென்னை,

மாநில சுயாட்சியை பாதுகாக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"மாநில சுயாட்சி, மக்கள் உரிமைகள், விவசாய பெருமக்கள், சிறுபான்மையினர் ஆகியோரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். அதன்படியே தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதோடு மக்களவை தேர்தலுக்கான அறிக்கை என்பதால் மத்திய அரசின் ஆட்சியை மையமாக வைத்து தேர்தல் அறிக்கையை உருவாக்கி உள்ளோம்."

இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்