திராவிட மாடல் ஆட்சி, தெற்கில் மட்டுமின்றி வடக்கிலும் ஒலிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

திராவிட மாடல் ஆட்சி, தெற்கில் மட்டும் ஒலிக்கவில்லை. வடக்கிலும் ஒலிக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரசாரத்தில் பேசியுள்ளார்.

Update: 2024-03-30 14:10 GMT

சேலம்,

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க.வை சேர்ந்த சேலம் வேட்பாளர் செல்வ கணபதி மற்றும் கள்ளக்குறிச்சி வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.

அவர் கூட்டத்தில் பேசும்போது, திராவிட மாடல் ஆட்சி, தெற்கில் மட்டும் ஒலிக்கவில்லை. வடக்கிலும் ஒலிக்கிறது. மக்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மத்திய அரசு எப்படி செயல்பட கூடாது என்பதற்கு பா.ஜ.க. அரசு எடுத்துக்காட்டாக உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியால், பொதுமக்களின் தூக்கம்தான் போய் விட்டது. தேர்தல் பத்திர ஊழலால், பா.ஜ.க.வினரின் தூக்கம் தொலைந்துள்ளது. சாதாரண மக்கள், பெண்கள், சிறுபான்மையினர் என அனைத்து மக்களும் நிம்மதியும், தூக்கமும் இழந்துள்ளனர்.

உளவு துறையின் அறிக்கைக்கு பின்னர் மோடி தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறார். வடமாநிலத்திலும் பா.ஜ.க. தோல்வியை தழுவும் என்ற காரணத்தினால், பா.ஜ.க.வின் தூக்கம் போய் விட்டது. உச்சக்கட்ட தோல்வி பயம் எதிரொலியாக விசாரணை அமைப்புகளை மோடி பயன்படுத்துகிறார். தேர்தல் நேரத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பற்றி பிரதமர் புகழ்ந்து பேசுகிறார்.

திடீரென்று பிரதமர் மோடிக்கு ஏன் இந்த பாசம் வந்தது? தமிழகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட பா.ஜ.க.வில் வேட்பாளர்கள் கூட இல்லை என்று பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்