தி.மு.க. அரசின் திட்டங்களை மக்கள் பாராட்டி வருகின்றனர் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று புதுச்சேரியில் பிரசாரம் செய்தார்;
புதுச்சேரி,
புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார்.அப்போது பேசிய அவர் ,
தி.மு.க. அரசின் திட்டங்களை மக்கள் பாராட்டி வருகின்றனர் . இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெற்று தரப்படும்.இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், மின்துறை தனியார் மயமாக்கப்படாது .புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் திறக்கப்படும் .மூடப்பட்டுள்ள அரசு சார்பு நிறுவனங்கள் திறக்கப்பட்டு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் புதுச்சேரி மத்திய பல்கலை.யில் உள்ளூர் மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்படும்.என தெரிவித்தார்.