தி.மு.க. வேட்பாளர் பிரசாரத்தில் 50 வாகனங்கள் - போலீசார் வழக்கு

தி.மு.க. வேட்பாளர் அருண்நேருவிற்கு வரவேற்பு அளிப்பதற்காக பஸ் நிறுத்தம் அருகே பட்டாசு வெடித்ததில், அங்கிருந்த பொதுமக்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

Update: 2024-03-29 13:19 GMT

பெரம்பலூர்,

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.அருண்நேரு பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவர் கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்ட போது கட்சியினர் உரிய அனுமதி பெறாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 50 வாகனங்களை பயன்படுத்தினர்.

இது தொடர்பாக வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலரும், தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அலுவலருமான சீனிவாசன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் லாடபுரத்தில் தி.மு.க. வேட்பாளர் அருண்நேருவிற்கு வரவேற்பு அளிப்பதற்காக கட்சியை சேர்ந்த சிலர் பஸ் நிறுத்தம் அருகே பட்டாசு வெடித்ததில், அங்கிருந்த பொதுமக்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக லாடபுரம் கிராம நிர்வாக அலுவலர் செந்தில் ராஜா கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்