ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்தாரா அண்ணாமலை? - விசாரணைக்கு உத்தரவு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்;

Update:2024-03-29 18:14 IST

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கெனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், கோவையில் தேர்தல் பிரசாரத்தின்போது ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மறைத்து வைத்து பணம் கொடுப்பதுபோல் வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- "பகிரப்பட்ட வீடியோவை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். உண்மை நிலையை கண்டறிய போலீஸ் குழுவுக்கு வீடியோ அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை நடபெற்று வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்