போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் த.மா.கா தோல்வி முகம் - தொண்டர்கள் அதிர்ச்சி
தற்போதையை நிலவரப்படி ஈரோடு, தூத்துக்குடியில் அக்கட்சி 4வது இடத்திலும், ஸ்ரீ பெரும்புதூரில் 3வது இடத்திலும் உள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த தேர்தலில் ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது. இதில் த.மா.கா-விற்கு மூன்று தொகுதிகள் (ஸ்ரீ பெரும்புதூர், ஈரோடு, தூத்துக்குடி) ஒதுக்கப்பட்டன.
வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வி முகத்தை நெருங்கி உள்ளது. தற்போதையை நிலவரப்படி ஈரோடு, தூத்துக்குடியில் அக்கட்சி 4வது இடத்திலும், ஸ்ரீ பெரும்புதூரில் 3வது இடத்திலும் உள்ளது. இதனால் தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.