உயிருக்கு ஆபத்து... கண்ணீருடன் சுயேட்சை வேட்பாளர் பரபரப்பு புகார்

கோவையில் தனது உயிருக்கு ஆபத்து என மனு அளித்தும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று சுயேட்சை வேட்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.;

Update: 2024-04-13 16:46 GMT

கோவை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் தனது உயிருக்கு ஆபத்து என மனு அளித்தும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று சுயேட்சை வேட்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் நூர்முகமது என்பவர், சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவருக்கு கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என, கண்ணீர் மல்க குற்றம் சாட்டியுள்ளார். இவர் இதுவரை 43 முறை சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Full View

Tags:    

மேலும் செய்திகள்