கர்நாடகாவில் காங்கிரஸ் பின்னடைவு
கர்நாடகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது.;
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க. 16 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணியில் உள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 10 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.