அதிக ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ்: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்- ஒரு பார்வை

18-வது மக்களவைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.;

Update:2024-03-29 13:06 IST

இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபை அல்லது மக்களவைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். இந்த காலகட்டத்தில் பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிவுக்கு வரும்.

நாடு சுதந்திரம் அடைந்தபிறகு முதல் பொதுத்தேர்தல் 1951-52ல் நடத்தப்பட்டது. கடைசியாக 2019ல் 17-வது மக்களவைக்கான தேர்தல் நடத்தப்பட்டது. 18-வது மக்களவைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

இதுவரை நடைபெற்ற 17 பொதுத் தேர்தல்களில் 10 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளது. பா.ஜ.க. ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் தொடர்பான சுருக்கமான விவரத்தை பார்ப்போம்.

ஆண்டு மொத்த தொகுதிகள் வாக்குப்பதிவு சதவீதம் தனிப்பெரும் கட்சி வென்ற தொகுதிகள் பிரதமர்
1951-52 489 44.87% காங்கிரஸ் 364 ஜவகர்லால் நேரு
1957 494 45.44% காங்கிரஸ் 371 ஜவகர்லால் நேரு
1962 494 55.42% காங்கிரஸ் 361 நேரு, லால் பகதூர் சாஸ்திரி
1967 520 61.04% காங்கிரஸ் 283 இந்திரா காந்தி
1971 518 55.27% காங்கிரஸ் 352 இந்திரா காந்தி
1977 542 60.49% ஜனதா கட்சி 295 மொரார்ஜி தேசாய்
1980 529 56.92% காங்கிரஸ் 353 இந்திரா காந்தி
1984 541 64.01% காங்கிரஸ் 414 ராஜீவ் காந்தி
1989 529 61.95% ஜனதா தளம் 197 வி.பி.சிங்
1991 534 56.73% காங்கிரஸ் 244 பி.வி.நரசிம்ம ராவ்
1996 543 57.94% பா.ஜ.க. 161 வாஜ்பாய்
1998 543 61.97% பா.ஜ.க. 182 வாஜ்பாய்
1999 543 59.99% பா.ஜ.க. 182 வாஜ்பாய்
2004 543 58.07% காங்கிரஸ் 145 மன்மோகன் சிங்
2009 543 58.21% காங்கிரஸ் 206 மன்மோகன் சிங்
2014 543 66.44% பா.ஜ.க. 282 நரேந்திர மோடி
2019 543 67.40% பா.ஜ.க. 303 நரேந்திர மோடி


Tags:    

மேலும் செய்திகள்