வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

வாக்கு எண்ணிக்கை தொடர்பான அப்டேட்டுகளை தாமதம் இல்லாமல் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.;

Update:2024-06-04 16:54 IST

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதியிலும் பா.ஜனதா முன்னிலை வகிக்கிறது. உத்தர பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில், பா.ஜனதா கூட்டணியை விட இந்தியா கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கிறது. பா.ஜ.க.விற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் தேசிய ஜனநாயக கூட்டணி 296 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறும்போது, "பிற்பகல் 2:30 மணிக்குப் பிறகு, தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான அப்டேட்டுகள் தாமதமாக பதிவேற்றப்படுவதாக பல்வேறு மாநிலங்களில் இருந்து கட்சி தலைமைக்கு புகார் வந்தது.

இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான அப்டேட்டுகளை தாமதம் இல்லாமல் பதிவேற்ற வேண்டும் என்று மனு அளித்துள்ளோம். நாங்கள் எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை, தேர்தல் ஆணையம் எங்களுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்று கேட்டோம். தேர்தல் ஆணையமும் தாமதம் இல்லாமல் அப்பேட்டுகள் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்