காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்: மண்டி தொகுதியில் கங்கனாவை எதிர்த்து மாநில மந்திரி போட்டி

நாடாளுமன்ற தேர்தலுக்கான மேலும் 16 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-04-13 21:05 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் மேலும் 16 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் முக்கியமாக முன்னாள் மத்திய மந்திரியும், கட்சியின் மூத்த தலைவருமான மணிஷ் திவாரி சண்டிகார் தொகுதியில் களமிறக்கப்பட்டு உள்ளார்.

இமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் நடிகை கங்கனா ரணாவத்தை எதிர்த்து, மாநில மந்திரி விக்ரமாதித்ய சிங்கை காங்கிரஸ் நிறுத்தி உள்ளது. இவர் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங்கின் மகன் ஆவார்.

மகேசனா தொகுதியில் ராம்ஜி தாகூர், அகமதாபாத் கிழக்கு தொகுதியில் ஹிம்மத்சிங் படேல், ராஜ்கோட் தொகுதியில் பரேஷ்பாய் தனானி, நவசாரி தொகுதியில் நைஷாத் தேசாய், சிம்லாவில் வினோத் சுல்தான்புரி, கியோஞ்சரில் மோகன் ஹெம்ப்ராம், பத்ரக் தொகுதியில் அனந்த் பிரசாத் சேத்தி, பாலாசோர் தொகுதியில் ஸ்ரீகாந்த் குமார் ஜெனா, ஜாஜ்பூரில் அஞ்சல் தாஸ், தேன்கனலில் சஷ்மிதா பெஹெரா, கேந்த்ராபரா தொகுதியில் சித்தார்த் ஸ்வரூப் தாஸ், ஜகத்சிங்பூரில் ரவீந்திர குமார் சேத்தி, பூரியில் சுசரிதா மொஹந்தி மற்றும் புவனேஸ்வரில் யாசிர் நவாஸ் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியலைத் தவிர, குஜராத் சட்டசபைக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயர்களையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன்படி, விஜாப்பூர் தொகுதியில் தினேஷ்பாய் துளசிதாஸ் படேல், போர்பந்தர் தொகுதியில் ராஜூபாய் பீமன்பாய் ஒடெட்ரா, மானவதார் தொகுதில் ஹரிபாய் கோவிந்த்பாய் கன்சாகரா, காம்பாட் தொகுதியில் மகேந்திரசிங் ஹரிசிங் பர்மர் மற்றும் வகோடியா தொகுதியில் கனுபாய் பூஜாபாய் கோஹில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்