முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூரில் பிரசாரம்

கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.;

Update:2024-04-16 05:27 IST

கோப்புப்படம்

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டங்கள் வாயிலாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் அவர், காஞ்சீபுரம் தி.மு.க. வேட்பாளர் செல்வம், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோரை ஆதரித்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலையில் பிரசாரம் செய்கிறார்.

இதற்கிடையே வடசென்னை தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிக்க உள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க. சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சேகர்பாபு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 'முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 16-ந்தேதி (இன்று) காலை 7 மணியளவில் சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஜி.கே.எம். காலனிக்குட்பட்ட 32 தெருக்களில் திறந்த வாகனத்தில் வடசென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்' என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்