பா.ஜ.க.வில் இணைந்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் டெல்லியில் ஜே.பி.நட்டாவுடன் சந்திப்பு

டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை இன்று விஜேந்தர் சிங் நேரில் சந்தித்து பேசினார்.

Update: 2024-04-09 16:35 GMT

Image Courtesy : @OfficeofJPNadda

புதுடெல்லி,

பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கடந்த 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் 2024 மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், சமீபத்தில் விஜேந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால், அவர் பா.ஜ.க.வில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து விஜேந்தர் சிங் கூறுகையில், "நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன்" என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில், டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை இன்று விஜேந்தர் சிங் நேரில் சந்தித்து பேசினார். இது குறித்து ஜே.பி.நட்டாவின் அலுவலகம் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அவரது வாழ்த்துக்களையும், வழிகாட்டுதல்களையும் பெற்றுக்கொண்டார்" என்று பதிவிடப்பட்டுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்