10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் - எந்த தொகுதி தெரியுமா?

10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார்.;

Update:2024-06-04 17:42 IST

போபால்,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் பா.ஜ.க. 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சங்கர் லால்வானி 12,26,751 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் நோட்டா 2,18,674 வாக்குகளைப் பெற்றுள்ளது. சங்கர் லால்வானி நோட்டாவை விட 10,08,077 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.

நோட்டாவுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் சஞ்சய் 51,659 வாக்குகள் பெற்றார்.

இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்சய் காண்டி பாம் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்