எந்த விலை கொடுத்தாவது ஆட்சியை பிடிப்பதுதான் பா.ஜ.க.வின் நோக்கம் - பிரியங்கா காந்தி

கடந்த 10 ஆண்டுகளில் உலகின் பணக்கார கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்துள்ளது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-27 10:46 GMT

சிம்லா,

இமாச்சல பிரதேசத்தின் சம்பா பகுதியில் காங்க்ரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த் சர்மாவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,

"பா.ஜ.க. தலைவர்களின் ஒரே நோக்கம், எந்த விலை கொடுத்தாவது இந்த தேர்தலில் ஆட்சியை பிடிப்பதுதான். அதற்காக ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது, பணபலம், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுப்பது மற்றும் கடவுளின் பெயரால் மக்களை தவறாக வழிநடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மாநிலத்தில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசாங்கத்தை ஊழல் நடவடிக்கை புகார்கள் மூலமும், பண பலத்தை பயன்படுத்தியும் கவிழ்க்க பிரதமர் மோடி முழு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். சுமார் 55 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் பணக்கார கட்சியாக மாற முடியவில்லை. ஆனால் 10 ஆண்டுகளில் உலகின் பணக்கார கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்துள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்