பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை: கனிமொழி பேச்சு

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி., கனிமொழி கூறினார்.

Update: 2024-03-29 05:44 GMT

கோவை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை.

பொய் செய்திகளை பரப்பவே பா.ஜ.க. குழு வைத்துள்ளது. பொய் செய்திகளை ஒரு குழு மூலம் பரப்பி, மத ரீதியான பிரச்சனைகளை பா.ஜ.க. ஏற்படுத்துகிறது. ஏழை விவசாயிகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்கிறது. அம்பானிக்கும், அதானிக்குமான ஆட்சி தான் பாஜக ஆட்சி.

வரி என்ற பெயரில் நம்முடைய நிதி அனைத்தையும் மத்திய அரசு எடுத்துச்சென்றுவிடுகிறது. ஆனால் இத்தனை நெருக்கடியிலும், உங்களுக்கு கட்டணமில்லாத விடியல் பயணம், புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்று எதையும் நிறுத்தாமல் செயல்படுத்திக் கொண்டிருக்கிற ஆட்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்