சர்வாதிகாரத்தால் நாட்டுக்கு ஆபத்து: உத்தவ் தாக்கரே தாக்கு

எல்லோரையும் அரவணைத்து செல்கிற பலமான தலைவர் எங்களுக்கு வேண்டும். ‘இந்தியா’ கூட்டணியால், கூட்டணி அரசை வழங்க முடியும் என்று தெரிவித்தார்

Update: 2024-04-13 22:53 GMT

கோப்புப்படம்

மும்பை,

மும்பை பாந்திராவில் உள்ள உத்தவ் தாக்கரேவின் 'மாதோஸ்ரீ' இல்லத்தில் நேற்று நடந்த விழாவில் பா.ஜனதா, வஞ்சித் பகுஜன் அகாடி போன்ற மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவில் இணைந்தனர்.

அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே, "கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக நாட்டில் அதிருப்தி பெரிய அளவில் நிலவுகிறது. சர்வாதிகாரம் நாட்டுக்கு ஆபத்தானதாகும். கூட்டணி ஆட்சியே வேண்டாம் என்ற எண்ணம் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் பி.வி. நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர் கூட்டணி ஆட்சியை சிறப்பாக நடத்தினர்.

சில விஷயங்களை தவிர்த்து கூட்டணி அரசுகள் நாட்டில் சிறப்பாக செயல்பட்டு உள்ளன. நாங்கள் பலமான நாடு மற்றும் கூட்டணி ஆட்சி அமைய விரும்புகிறோம். எல்லோரையும் அரவணைத்து செல்கிற பலமான தலைவர் எங்களுக்கு வேண்டும். 'இந்தியா' கூட்டணியால், கூட்டணி அரசை வழங்க முடியும்" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்