ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு: தேர்தல் ஆணையம்

வாக்குப்பதிவு நாளன்று பணியில் உள்ள ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது;

Update:2024-03-19 21:44 IST

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட உள்ளன.இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு நாளன்று பணியில் உள்ள ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.அதில், தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரியும் ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பல ஆண்டாக கோரிக்கை விடுத்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்