வாக்கு எண்ணும் பணிகளை பார்வையிட பொது பார்வையாளர்கள் நியமனம்

3 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிகளை பார்வையிட வாக்கு எண்ணிக்கைக்கான பொது பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2024-06-03 00:39 IST

கோப்புப்படம்

சென்னை,

சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிகளை பார்வையிட வாக்கு எண்ணிக்கைக்கான பொது பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இதையொட்டி சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கைக்கான பொது பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

வாக்கு எண்னும் பணிகளை பார்வையிட, வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி (செல்போன் எண் - 94459 10953) நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் தொகுதிகளுக்கு ராஜேஷ் குமார் (94459 10932) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம் தொகுதிகளுக்கு ஜிதேந்திரா ககுஸ்தே (94459 10940), சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு டி.சுரேஷ் (94459 10956) ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தென் சென்னை தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர் தொகுதிகளுக்கு முத்தாடா ரவிச்சந்திரா (94459 10957), மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் தொகுதிகளுக்கு முகமது சபிக் சக் (94459 10945) ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்