அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் திடீர் ரத்து
மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் நாளை, நாளை மறுநாளும் அமித்ஷா பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
புதுடெல்லி,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தல், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி உள்ளது.
இதில் தேசிய கட்சியான பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே 3 முறை தமிழகத்திற்கு வந்து பிரசாரம் மேற்கொண்டார்.
அவரை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரியும், மூத்த தலைவருமான அமித்ஷா நாளை பிரசாரத்துக்காக மதுரை வர இருந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் திடீரென தனது பயணத்தை அமித்ஷா ரத்து செய்துள்ளார். மத்திய மந்திரி அமித்ஷாவின் தமிழக தேர்தல் பிரசாரம் எப்போது என்பது பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ள இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.