காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியின் பியூஸ் போய்விட்டது- பிரசார கூட்டத்தில் கிண்டலடித்த பிரதமர் மோடி

மக்களின் ஆசீர்வாதத்தால் பா.ஜ.க.வும், என்.டி.ஏ. கூட்டணியும் வெற்றிப்பாதையில் சென்றுகொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

Update: 2024-05-08 07:00 GMT

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள வெமுலவாடா பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இதுவரை மூன்று கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்னும் 4 கட்ட வாக்குப்பதிவு மீதமுள்ளது. மக்களின் ஆசீர்வாதத்தால் பா.ஜ.க.வும், என்.டி.ஏ. கூட்டணியும் வெற்றிப்பாதையில் சென்றுகொண்டிருக்கின்றன. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு, காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியின் மூன்றாவது பியூஸ்  போய்விட்டது.

'தேசம் முதலில்' என்ற கொள்கையில் பா.ஜ.க. நம்பிக்கை கொண்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிக்கு குடும்பம்தான் முதலில்.

அதானி, அம்பானி என கடந்த ஐந்து ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி முழக்கமிட்டுக்கொண்டிருந்தது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் அந்த முழக்கத்தை நிறுத்திவிட்டது. நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்