புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தர அ.தி.மு.க. அழுத்தம் தரும் - எடப்பாடி பழனிசாமி பரப்புரை

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கைகட்டி நிற்கும் நிலை உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2024-03-30 14:01 GMT

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ் வேந்தனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தர அ.தி.மு.க. அழுத்தம் தரும். புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கைகட்டி நிற்கும் நிலை உள்ளது. புதிய சட்டமன்றம் கட்டுவதற்கு கூட புதுச்சேரி கவர்னர் அனுமதி தரவில்லை. புதுச்சேரியில் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியவில்லை. வாக்குறுதி தந்தாலும் கவர்னர் அனுமதி தேவைப்படுகிறது.

தமிழ்நாட்டில் முதல்-அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது போல், புதுச்சேரியிலும் கிடைக்க அ.தி.மு.க. போராடும். ஆட்சியில் இருந்த காங்கிரஸ், பா.ஜ.க. புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்கு எதையும் செய்யவில்லை. மூடி கிடக்கும் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை, நூற்பாலையை திறக்க அ.தி.மு.க. நடவடிக்கை எடுக்கும்.

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் போதைப் பொருள் கடத்தல் நடைபெறுகிறது. புதுச்சேரியில் சிறுமி கொலைக்கு போதைப்பொருள் நடமாட்டமே காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்