பா.ஜ.க. பிரசார வாகனத்தில் அ.தி.மு.க. கொடி
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், நீலகிரி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி எல்.முருகனின் பிரசார வாகனத்தில் கூட்டணி கட்சி கொடிகளோடு அ.தி.மு.க. கொடியும் இருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் சொன்னதை அடுத்து வாகனத்தில் இருந்த அ.தி.மு.க. கொடி அகற்றப்பட்டது.