சேலம்: அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பட்டை கோவில் கடை வீதியில் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு
அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சேலம் பட்டை கோவில் கடை வீதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
சேலம்,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சேலம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று காலை முதல் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
பட்டை கோவிலில் சாமிதரிசனம் செய்த பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசை ஆதரித்து பட்டை கோவில் கடைவீதி பகுதியில் வியாபாரிகள், பொதுமக்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.