வாக்கு செலுத்த வந்த நடிகர் சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி

நடிகர் சூரி தனது வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.;

Update:2024-04-19 17:06 IST

சென்னை,

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்பிரபலங்கள் பலர் அதிகாலை முதலே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சூரி, சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் வாக்களிக்க சென்றார். ஆனால் வாக்காளர்களின் பெயர் பட்டியலில் சூரியின் பெயர் விடுபட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் கூறினர். இதனால் நடிகர் சூரி தனது வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் இதுவரை அனைத்து தேர்தல்களிலும் என வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றி இருக்கிறேன். அந்த வகையில் இன்று என் மனைவியுடன் வாக்கு செலுத்துவதற்காக வந்தேன். எனது மனைவி வாக்கு செலுத்திவிட்டார். ஆனால் என்னுடைய பெயர் விடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எங்கு தவறு நடந்தது என்று தெரியவில்லை. என்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியவில்லை என்பது வேதனையாக உள்ளது. அடுத்த தேர்தலில் என்னுடைய வாக்கை தவறாமல் செலுத்துவேன். தயவு செய்து அனைவரும் 100% உங்கள் வாக்கை செலுத்திவிடுங்கள். அது நமது நாட்டிற்கு மிகவும் முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்