சிக்கிம் சட்டசபை தேர்தல்: 79.77 சதவிகித வாக்குப்பதிவு

சிக்கிம் சட்டசபை தேர்தலில் 79.77 சதவிகித வாக்குப்பதிவாகியுள்ளது.

Update: 2024-04-20 10:52 GMT

கங்டோக்,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் நேற்று (19-ம் தேதி) நடைபெற்றது. எஞ்சிய 6 கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சிக்கிம், அருணாச்சலபிரதேசம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் நேற்று நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலுடன் சேர்த்து சிக்கிம், அருணாச்சலபிரதேச மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலும் நடைபெற்றது.

சிக்கிமில் ஒரே ஒரு நாடாளுமன்ற தொகுதி மட்டுமே உள்ளது. அதேவேளை, 32 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவை அனைத்திற்கும் நேற்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், சிக்கிமில் நாடாளுமன்ற தேர்தலில் 80.03 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதேவேளை, மாநில சட்டசபை தேர்தலில் 79.77 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. குறிப்பாக அம்மாநிலத்தின் யாக்சம்-தஷிடிங் தொகுதியில் அதிகபட்சமாக 85.37 சதவிகித வாக்குப்பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக தலைநகர் கங்டோக் தொகுதியில் 63.66 சதவிகித வாக்குப்பதிவாகியுள்ளது. சிக்கிம் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜுன் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்ட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்