நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல்: 5 மணி நிலவரப்படி 56.68 சதவீத வாக்குப்பதிவு
நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.;
லக்னோ,
5-கட்டமாக 49 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. உ.பி. 14, மராட்டியம் 13, மேற்கு வங்காளம் 7, ஜார்க்கண்ட் 3, பீகார்.ஒடிசா தலா 5, ஜம்மு காஷ்மீர் - லடாக் தலா ஒரு தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மாலை 5 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்
8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 56.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநில வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:
பீகார் - 52.35%
ஜம்மு-காஷ்மீர் - 54.21%
ஜார்க்கண்ட் - 61.90%
லடாக் - 67.15%
மராட்டியம் - 48.66%
ஒடிசா - 60.55%
மேற்குவங்காளம் - 73.02%
உத்தர பிரதேசம் - 55.80%
நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் எம்.பி.ஜெயா பச்சன் மும்பையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
பிற்பகல் 3 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்
8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 47.53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநில வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:
பீகார் - 45.33%
ஜம்மு-காஷ்மீர் - 44.90%
ஜார்க்கண்ட் - 53.90%
லடாக் - 61.26%
மராட்டியம் - 39.77%
ஒடிசா - 48.95%
மேற்குவங்காளம் - 48.41%
உத்தர பிரதேசம் - 47.55%
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் வரிசையில் நின்று வாக்களித்தார்.
மதியம் 1 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்
8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 36.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநில வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:
பீகார் - 34.62%
ஜம்மு-காஷ்மீர் - 34.79%
ஜார்க்கண்ட் - 41.89%
லடாக் - 52.02%
மராட்டியம் - 27.78%
ஒடிசா - 35.31%
மேற்குவங்காளம் - 48.41%
உத்தர பிரதேசம் - 48.41%
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரன்வீர் சிங் தனது மனைவி தீபிகா படுகோனுடன் வந்து வாக்களித்தார்.
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கருடன் வந்து வாக்களித்தார்.
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் தொழிலதிபர் அனில் அம்பானி வரிசையில் நின்று வாக்களித்தார்.