ஓ.டி.டி.யில் வெளியான ராஜ்குமார் ராவின் 'ஸ்ரீகாந்த்'
பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவின் 'ஸ்ரீகாந்த்' படம் ஓ.டி.டி.யில் வெளியானது.;
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகர்களில் ஒருவர் ராஜ்குமார் ராவ். இவர் 'ஸ்ரீகாந்த்' படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தை துஷார் ஹிரானந்தனி இயக்கியுள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான தொழில் அதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாறு படமாக இது உருவாகி உள்ளது.
இந்தப்படத்தில் ஜோதிகா, ஷரத் கேல்கர், ஜமீல் கான், அனுஷா நூதுலா, பாரத் ஜாதவ் மற்றும் சுகிதா மூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தை பூஷன் குமார் தயாரித்துள்ளார்.
கடந்த மே 10-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, நெட்பிளிக்ஸ் இந்தப்படத்திற்கான ஓடிடி உரிமையை பெற்றது.
இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'ஸ்ரீகாந்த்' படம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ராஜ்குமார் ராவின் அடுத்த படமான 'மாலிக்' படத்திற்கான படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.