காசாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு

போரினால் ஏற்பட்ட மோசமான துன்பங்கள் மற்றும் துயர நிலைமைக்கு நிரந்தரமாக தீர்வு காணப்பட்டதாக அரபு பாராளுமன்றத்தின் சபாநாயகர் முகமது அஹ்மத் அல்-யமாஹி,கூறியுள்ளார்.

Update: 2024-12-07 23:09 GMT

அபுதாபி,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.

இதற்கு பதிலடியாக காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் அரசு போர் தொடுத்தது. சுமார் 13 மாதங்களாக நடந்து வரும் மோதலில், காசா முனையில் இதுவரை 44,056 பேர் உயிரிழந்து உள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 1,04,268 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போரில் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என காசா சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு தனது ஆதரவை அளித்து வரும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு(UAE) அரபு நாடாளுமன்றம் பாராட்டியுள்ளது, அதே நேரத்தில் இஸ்ரேல் அரசால் நடத்தப்படும் இடைவிடாத போரினால் ஏற்பட்ட மோசமான துன்பங்கள் மற்றும் துயர நிலைமைக்கு நிரந்தரமாக தீர்வு காணப்பட்டதாக அரபு பாராளுமன்றத்தின் சபாநாயகர் முகமது அஹ்மத் அல்-யமாஹி,கூறியுள்ளார்.

இது குறித்து சபாநாயகர் முகமது அஹ்மத் அல்-யமாஹி வெளியிட்டுள்ள அறிக்கையில்;

அனைத்து மட்டங்களிலும் அரசியல் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதற்கு ஐக்கிய அரபு அமீரகம் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. மேலும் பாலஸ்தீன மக்களின் தொடர்ச்சியான துன்பங்களை போக்குவதற்கு ஆதரவளிக்கும் நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் முதன்மையாக உள்ளது. இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் தனது பாலஸ்தீன சகோதர சகோதரிகளுக்கு மரியாதை செலுத்துவது ஒரு தார்மீக மற்றும் மனிதாபிமானக் கடமையாகும் என்று அல்-யமாஹி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்