9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
டெல்டா மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.