சென்னையில் மழை.. 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை,
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை எழும்பூர், வேப்பேரி, சென்ட்ரல், சேப்பாக்கம், மயிலாப்பூர், ம்நதைவெளி, தரமணி, அண்ணாசாலை, சிந்தாதிரிப்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.