சென்னையில் பரவலாக மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவில் பரவலாக மழை பெய்தது.

Update: 2024-11-25 17:20 GMT

சென்னை,

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இந்த சூழலில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்ததாழ்வு மண்டலமாக இன்று காலை வலுபெற்றது.

சென்னையில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 1050 கிலோ மீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைப்பெற்றுள்ளது. இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பெறும். அதடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம் - இலங்கை கடற்கரையை இது நோக்கி நகரும். இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை கடந்த சில தினங்களாக குளிர்ச்சியான சூழல் நிலவியது. இன்று மாலையில் திடீரென வானிலையில் மாற்றம் தெரிந்தது. குளிர்ச்சி குறைந்தது அவ்வப்போது லேசான தூறல் மழை பெய்தது. இந்த நிலையில், இரவு 10 மணிக்கு மேல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சென்னை எழும்பூர், வேப்பேரி, கோடம்பாக்கம், கிண்டி, மயிலாப்பூர், அடையார் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்