சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை பரவலாக மழை பெய்தது.

Update: 2024-10-20 01:03 GMT

சென்னை,

வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்தது. எழும்பூர், கிண்டி, வேளச்சேரி, புரசைவாக்கம், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதேவேளை, புறநகர் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்