புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;
புதுச்சேரி,
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, அம்மாநிலத்தில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிப்பை மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார்.