சென்னை அருகே குன்றத்தூரில் எலி மருந்தின் நெடியால் 2 குழந்தைகள் உயிரிழப்பு
சென்னை அருகே எலி மருந்தின் நெடியால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
சென்னை,
சென்னை புறநகர் குன்றத்தூர் அருகே வீட்டில் எலித் தொல்லையை கட்டுப்படுத்த அடிக்கப்பட்ட எலி மருந்தின் நெடியால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரிதரன் (34 வயது) - பவித்ரா (31 வயது) தம்பதிக்கு வைஷ்ணவி (6 வயது) என்ற மகளும் சாய் சுதர்சன் (1 வயது) என்ற மகனும் உள்ளனர். வீட்டில் எலித்தொல்லையை கட்டுப்படுத்த எலி மருந்து அடித்துள்ளனர். மருந்து அடிக்கப்பட்ட அறையில் நேற்றிரவு ஏ.சி. போட்டுக்கொண்டு தூங்கியுள்ளனர்.
இந்த நிலையில் மருந்தின் நெடி அதிகமாக இருந்ததால் நால்வரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் குழந்தைகள் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். கிரிதரனும், பவித்ராவும் போரூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.