*பாஜக ஆளும் மாநிலங்களை விட இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்.
*இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் பெண்கள் அதிகம் வேலைக்கு செல்கிறார்கள்
*பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த இன்று ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது"
- தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதி பேசியதற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்தியா கூட்டணி கலகலத்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
*இந்தியா கூட்டணி கலகலத்துவிட்டது
*இந்தியா கூட்டணியை ஆதரித்துவிட்டு நாணய வெளியீட்டிற்கு பாஜகவை அழைத்தது ஏன்?
* திமுக போன்று நாங்கள் இரட்டை வேடம் போடவில்லை.
* பாஜக கூட்டணியில் இருந்து விலகியும் கள்ளக் கூட்டணி என திமுக பேசுவது என்ன நியாயம்?
* ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு இன்னொரு கட்சிக்கு வால் பிடிப்பது அதிமுக அல்ல
* அதிமுக யாருக்கும் அடிமை இல்லை; எதுவாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்து நிற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கூடுதலாக 7 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. பொங்கல் கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலைய நடைமேடைகளில் ஆங்காங்கே தானியங்கி பயணச்சீட்டு இயந்திரமும் வைக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுவிப்பு
2002ம் ஆண்டு சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக - திமுக கவுன்சிலர்கள் இடையே மோதலில் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இவ்வழக்கில் 2019ம் ஆண்டு போலீசார், சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அமைச்சர் மா.சுப்பிரமணியனை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் 70 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து 15 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விரைவில் த.வெ.க மாவட்ட செயலாளர்களை தனித் தனியாக விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை நியமிக்கும் மசோதாவுக்கு எதிர்க்கட்சியான அதிமுக, பாமக, கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உள்ளாட்சிகளுக்கான தனி அதிகாரி நியமன மசோதாவுக்கு திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதாவை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்தார். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மன்னிக்க முடியாது. குற்றங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். அதற்காகவே இந்த சட்டத்திருத்தம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பெண்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்க சட்டமுன்வடிவு
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் ஈடுபடும் நபர்களுக்கு ஜாமீனில் வெளிவராத வகையில் சட்டங்களை கடுமையாக்குவது தொடர்பான சட்ட |திருத்த மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் ஆகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.