இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-02-17 09:09 IST
இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-02-2025


Live Updates
2025-02-17 11:42 GMT

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை. செங்கோட்டையனுக்கு வேறு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

2025-02-17 11:20 GMT

மயிலாடுதுறையில் சாராய வியாபாரிகளால் 2 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக பெரம்பலூர் காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பூர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த நாகவள்ளி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

2025-02-17 08:30 GMT

எனது தாய்மொழியை ஊக்குவிக்கும் தேசிய கல்வி கொள்கையை நான் எதற்காக எதிர்க்க வேண்டும்? என மத்திய இணை மந்திரி எல். முருகன் கேட்டுள்ளார்.

2025-02-17 08:29 GMT

கல்லூரி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது, மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி, நான் ஒருவேளை பேராசிரியராக இருந்திருந்தால், மாணவர்களுக்கு புரியும்படி பாடமெடுத்திருப்பேன் என நகைச்சுவையாக கூறினார்.

2025-02-17 07:11 GMT

திருப்பரங்குன்றம் மலை மீது மத்திய இணை மந்திரி எல். முருகன் சென்றபோது, அவருடன் நிறைய பேர் சென்றனர். இதனால், அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதன் தொடர்ச்சியாக பரபரப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பின்னர், மந்திரி எல். முருகனுடன் 5 பேர் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்