இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

சென்னை: சைதாப்பேட்டை அருகே ஸ்டார்ட் செய்து வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் ஆக்ஸிலேட்டரை, அறியாமல் திருகிய 4 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையை வாகனத்தில் நிற்கவைத்துவிட்டு, குழந்தையின் தாத்தா அருகில் இருந்த கடைக்கு சென்ற போது இவ்விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தைப்பூசத்தையொட்டி நாளை பதிவு அலுவலகங்கள் செயல்படும். நாளை காலை 10 மணி முதல் ஆவணப் பதிவு முடியும் வரை செயல்பாட்டில் இருக்கும். பொதுவிடுமுறை நாளான தைப்பூசம் நாளில் ஆவணப் பதிவுகளை மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
2வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது நியூசிலாந்து.
தஞ்சை: பள்ளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு மாணவி கவிபாலா மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மாணவியின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவெக தலைவர் விஜயுடன், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் 2.30 மணி நேரம் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜயின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டை, இந்தியாவின் ஒரு மாநிலமாக அங்கீகரிக்க மத்திய அரசு மறுக்கிறது. ததமிழ்நாடு உயர்கல்வியில் சிறப்பாக பணியாற்றி வருகிறது. ஆனால் யுஜிசி மூலம் மத்திய அரசு, மாநில அரசின் அதிகாரத்தை பறிக்க முயற்சிக்கிறது என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேசினார்.
திண்டுக்கல்லில் ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு.
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில், 21 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி மத நல்லினக்கத்திற்கு எடுத்துக்காட்டாக 51 தட்டுகளில் கும்பாபிஷேகத்திற்கு தேவையான நெய், பழங்கள், புடவை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர் இஸ்லாமியர்கள்.
ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பிப்.13-ல் போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த மாதம் நடைபெறுவதாக இருந்தது.