கவர்னர் உரையை வாசித்த சபாநாயகர் அப்பாவு
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபைக்கு வந்த சிறிது நேரத்தில், உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். கவர்னர் வெளியேறிய நிலையில் அவரது உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
திருப்பதி மலைக்கு சித்தூரில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் சென்றபோது ரங்கம்பேட்டை அருகே, அவர்கள் மீது ஆம்புலன்ஸ் மோதியது. இதில் 2 பெண் பக்தர்கள் பலியானார்கள்.
அதிகாலை நிலவிய கடும் பனிப்பொழிவால், ஓட்டுநருக்கு சரியாக சாலை தெரியாமல் விபத்து நிகழ்ந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவுடன் தேசிய கீதம் பாட வேண்டும் என முதல்-அமைச்சர், சபாநாயகரிடம் வலியுறுத்தினார். ஆனால், கவர்னர் வைத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு உள்ளது.
இதனால், மிகுந்த வருத்தத்துடன் அவையில் இருந்து கவர்னர் வெளியேறினார். அரசியல் சாசனம், தேசிய கீதம் அவமதிப்புக்கு துணை போக முடியாது என கவர்னர் வெளியேறினார் என கவர்னர் மாளிகை விளக்கம் தெரிவித்து உள்ளது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, அவையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் எழுப்பினர். இதனை தொடர்ந்து, அவையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் சட்டசபையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
சட்டசபையில் உரையாற்றாமல் புறப்பட்டு சென்றார் கவர்னர்
ஆண்டின் முதல் கூட்டத்தொடருக்காக தமிழக சட்டசபை கூடியது. இந்நிலையில், சட்டசபைக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என். ரவிக்கு சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். எனினும், சட்டசபைக்கு வந்த சிறிது நேரத்தில் அவையில் உரையாற்றாமல் கவர்னர் புறப்பட்டு சென்றார். இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சற்று நேரத்தில் தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர்: கவர்னர் ஆர்.என்.ரவி வருகை
சென்னை,
இன்னும் சற்று நேரத்தில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபைக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அவரை சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சட்டையில் "யார் அந்த சார்?" வாசகம்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் சற்று நேரத்தில் கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளது. இந்த நிலையில் சட்டசபைக்கு வருகை தந்துள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை குறிக்கும் வகையில் "யார் அந்த சார்" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்து வந்துள்ளனர்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் சற்று நேரத்தில் கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில், கூட்டத்தொடரை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவைக்கு வருகை தந்துள்ளார்.